
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு மூன்று நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 15 ஓவர்களில் 83 ரன்கள் 3 விக்கெட்டுகள் இழந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
Arriving at the ground in style 😎
Only one way to beat the road closures in London 😂 pic.twitter.com/2xrSPypnQD
— England Cricket (@englandcricket) June 3, 2025
முன்னதாக இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. அது மழை காரணமாக அல்ல. வெஸ்ட் இண்டீஸ் அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்கு மைதானத்திற்கு வரவில்லை. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் சரியான நேரத்திற்கு மைதானத்திற்கு வர முடியவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் போக்குவரத்து நெரிசலை முன்னரே அறிந்து கொண்ட இங்கிலாந்து அணி தனித்தனியாக சைக்கிளில் மைதானத்திற்கு வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.