2023 உலக கோப்பை இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், நான்காவது அணியாக நியூசிலாந்து அணி நேற்று இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் 99.9 சதவீதம் அரையிறுதிக்கு சென்று விட்டது.. எனவே அரை இறுதி போட்டியில் இருந்த பாகிஸ்தான் கிட்டதட்ட வெளியேறும் நிலையில் இருக்கிறது. எனவே பாகிஸ்தான் அணி நாளை இங்கிலாந்தை அசாத்திய  முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு  செல்ல முடியும்.

ஆனால் அது எளிதானது கிடையாது அதற்கு அவர்களுக்கு அதிர்ஷ்டமும் தேவை. முதலில் டாசை வெல்ல வேண்டும். முதலில் பேட்டிங் தேர்வு செய்தால் மட்டுமே இது சாத்தியம்.. பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல இது நடந்தால் மட்டுமே சாத்தியம்

பாகிஸ்தானுக்கான தகுதி நிலை:

முதலில் பாகிஸ்தான் பேட் செய்து 300+ ரன்கள் குவித்து, இங்கிலாந்தை 13 ரன்னுக்கு கட்டுப்படுத்த வேண்டும். ஸ்கோர் 400 குவித்து இங்கிலாந்தை 112க்கு கட்டுப்படுத்த வேண்டும். ஸ்கோர் 450 குவித்து இங்கிலாந்தை 162க்குள் கட்டுப்படுத்த வேண்டும். ஸ்கோர் 500 குவித்து இங்கிலாந்தை 211க்கு கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் சனிக்கிழமையன்று பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 300 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்தின் NRR ஐ கடக்க பாகிஸ்தான் 6 ஓவர்களில் அந்த இலக்கை துரத்த வேண்டும். 6 ஓவர்களில் இந்த மிகப்பெரிய இலக்கை துரத்தவே முடியாது..

அதே போல இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் அல்லது 2.3 ஓவரில் இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கைத் துரத்த வேண்டும்.

முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே ஒரு சதவீதம் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது.. டாஸை இழந்து 2வது பேட்டிங் செய்தால் வாய்ப்பு இல்லை..எனவே நவம்பர் 15 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து இந்தியாவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.