தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீடுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் குடிசைகள் அகற்றப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் தகுதியானவர்களுக்கு ஒதுக்கப்படும் நிலையில் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் போக மீதம் உள்ளவை நேரடியாக விற்பனைக்கு வருகிறது.

அந்த வகையில் தற்போது மாநிலம் முழுவதும் சென்னை உட்பட 15 மாவட்டங்களில் உள்ள வீட்டு வசதி வாரிய வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்தமாக 20,000 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் இந்த வீடுகள் ரூ.4 லட்சம் முதல் ரூ‌.12 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வீடுகளை பெற விரும்புவோர் www.tnuhdb.org.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்த விலையில் வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளதால் விருப்பம்  உள்ளவர்கள் உடனே முந்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.