கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல் மந்திரி எச்.டி குமாரசுவாமியின் மகனுமான நிகில் குமாரசாமி கர்நாடகாவில் உள்ள சென்னப்பட்டனாதொகுதியில்  போட்டியிட உள்ளார். இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் யோகேஸ்வர் போட்டியிட உள்ளார்.

இந்த நிலையில் சென்னப்பட்டனா தொகுதியில் விருப்பச்சந்திரா கிராமத்தில் பிரச்சாரம் செய்த எச்.டி குமாரசாமி கூறியதாவது, சென்னப்பட்டனா தொகுதியில் பொதுமக்களை கவரும் வகையில் காங்கிரஸ் சார்பில் பரிசு கூப்பன்கள் வழங்கப்படுகிறது. சென்ற தேர்தலிலும் இதே போன்று இரவோடு இரவாக பொதுமக்களுக்கு பரிசு கூப்பன்களை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு இந்த கூப்பன் செல்லாது. பணம் எதுவும் தரப்பட வில்லை. எனவே பொதுமக்கள் இது போன்ற ஏமாற்று வலையில் சிக்க வேண்டாம். இவ்வாறு எச்.டி. குமாரசாமி கூறினார்.