டைரக்டர் ஷங்கர் இப்போது ஒரே சமயத்தில் இந்தியன்-2 மற்றும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் என 2 திரைப்படங்களையும் மாறிமாறி இயக்கி வருகிறார். கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பே தொடங்கிய இந்தியன்-2 படம் சில காரணங்களால் தடைப்பட்டு நின்றபோது, தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ராம்சரண் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினார் ஷங்கர்.

இதையடுத்து இந்தியன்-2 பட பிரச்னைகள் சுமூகமாக தீர்ந்ததால் அப்படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது 2 படங்களையும் மாறிமாறி இயக்கி வருகிறார் ஷங்கர். எனினும் ஷங்கருக்கு எந்தவித டென்ஷனும் இன்றி இந்த 2 படத்தின் பணிகளை கவனிக்கும் விதமாக படப்பிடிப்பு ஷெட்யூல் போட்டு தந்ததாக தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.