வார கணக்கில் மூடி வைக்கப்படாமல் இருக்கும் தண்ணீரை குடிப்பீர்களா என்று கேட்டால் இல்லை என்பதே பலரின் பதிலாக இருக்கும். ஆனால் விஞ்ஞானி ஒருவர் 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீரை குடித்துள்ளாராம். எல்லா நீறும் ஏதோ ஒரு வகையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் இப்போது புதிய தண்ணீருக்கும் பழைய தண்ணீருக்கும் உள்ள எளிய வித்யாசத்தை விஞ்ஞானிகள் எடுத்துரைத்துள்ளனர்.

2013ம் ஆண்டில் ஒரு விஞ்ஞானிகள் குழு கனடா நாட்டின் சுரங்கத்தில் உள்ள நீர் பாக்கெட்டுகள் பூமியின் மேற்பரப்பிற்கு கீழே கிட்டத்தட்ட 1.5 மைல் தொலைவில் இருப்பதை கண்டுபிடித்தது கனடாவின் ஹோன்டாரியாவில் உள்ள டிம்மின்ஸ் என்ற இடத்தில் உள்ள நீர் கிரானைட் போன்ற பாறைகளுக்கு இடையே மெல்லிய பிளவுகளில் சிக்கி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாதிரிகளை எடுத்து அந்த பகுதியை ஆய்வு செய்த பிறகு நீர் 2.6 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதை விஞ்ஞானிகள் தீர்மானித்தனர். அதன் பிறகு ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஒருவர் அந்த தண்ணீரை குடித்தார். இது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் தண்ணீருக்கும் பாறைக்கும் இடையே உள்ள எதிர்வினைகள் காரணமாக இது மிகவும் உப்பு தன்மை வாய்ந்தது. இது குழாய் நீரை விட பிசுபிசுப்பானது. இந்த தண்ணீர் ஆக்ஸிஜன் உடன் தொடர்பு கொள்ளும் போது அது ஆரஞ்சு நிறமாக மாறும். ஏனெனில் அதில் உள்ள தாதுக்கள் உருவாக தொடங்குகின்றன என தெரிவித்தார்.