அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனித்தனி அணிகளாக மல்லுக்கட்டின.  பிறகு ஒருங்கிணைந்து ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கட்சியையும் ஆட்சியும் வழிநடத்தினர். அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு….

அக்கட்சிக்குள் ஒற்றை தலைமைக்கான போட்டிவெடித்தது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்ற முயன்றபோது அனைத்தையும் கடந்து,  எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து  நீக்கப்பட்டு தற்போது தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் அதிமுகவின்  பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் நீக்கப்பட்டவர்கள், பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினால் அவர் அதிமுக உறுப்பினராக கருதப்படுவார் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதில் சொன்ன முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சியில் பொதுசெயலாளரை நேரில் சந்தித்து, மன்னிப்பு கடித்த கொடுக்கும் நடைமுறை…. அம்மா காலத்துல வழக்கமான ஒரு அறிவிப்புதான். இது அம்மா காலத்திலே  இந்த நடைமுறை வந்து பின்பற்றப்பட்டது.

பொதுச் செயலாளர் கிட்ட ஒரு மன்னிப்பு கோரி, கடித அழைப்பிதழ் மூலம் பொதுச் செயலாளர் பார்த்து முடிவு செய்வார்.  கட்சியில் சேர்த்துக்குறதா  ? இல்லையான்னு… ஆனால் அந்த கடிதம் வந்து மூணு பேருக்கு பொருந்தாது. ஓபிஎஸ்_சுக்கு  பொருந்தாது, டிடிவிக்கு பொருந்தாது, அப்புறம் வந்து திருமதி சசிகலா அவங்க மூணு பேருக்கு பொருந்தாது. மற்ற எல்லாருக்குமே பொருந்தும். ஆனால் கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்து பொதுசெயலாளர் தான் முடிவு செய்வார் என தெரிவித்தார்.