
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான போர் மோதல் நிலவி வந்தது. அப்போது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பல இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக நடிகை ப்ரீத்தி ஜிந்தா ரூ. 1.10 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை அவர் வழங்கியுள்ளார். சவுத் வெஸ்டர்ன் கமெண்ட்டின் கீழ் செயல்படும் ராணுவ மகளிர் நல சங்கத்திற்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அடுத்ததாக சன்னி தியோலுக்கு ஜோடியாக லாகூர் 1947 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அமீர்கான் தயாரித்து உள்ளார். இது ப்ரீத்தி ஜிந்தா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்கும் படமாகும்.