இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், லாலு அவர் வந்து மிசாவை எதிர்த்து போராடினார். மிசால லல்லு பிரசாத் யாதவ்-வை கைது பண்ணிட்டாங்க. லல்லு பிரசாத் யாதவை மிசாவில் கைது பண்ண உடனே அவருக்கு பிறந்த பொண்ணு பேரு ”மிஸ்ஸா” என வைத்தார்.பழைய திமுக காரன் எல்லாம் அன்னைக்கு நல்லா தெரியும்…   கரை வெட்டிய கழட்டி வச்சிட்டு எல்லாம் சத்தமில்லாமல் இருந்தான்.

இப்ப வந்து நான் மிசா-வை பார்த்தேன்,  நான் இந்திரா காந்தியை பார்த்தேன், நான்  நேருவை பார்த்தேன் என சொல்லுறாங்க. நீ யாரை வேணா பாக்கலாம். நரேந்திர மோடி முன்னால நீ ஒன்னும் இல்ல.  உனக்கு காங்கிரஸ்காரன் தான் கரெக்டான ஆளு. கனிமொழியை புடிச்சி  திகார்ல போட்டான். அப்போது இளங்கோவன் சொன்னாரு…. 63 சீட்டுக்கு ஒத்துக்கிட்டா தான் கூட்டணி. இங்க இருந்து சக்கர  நாற்காலியை ஒட்டிக்கிட்டே போயி பார்த்துட்டு வந்துட்டு,  அவங்க இவங்கள புடிச்சு ஜெயில்ல வச்சிருக்காங்க… பெயில் கிடைக்கணும் என்பதால் கூட்டணி..

நல்ல டீலிங். இதே  இந்திரா காந்தி இருந்து இருந்தா..? இப்படி எல்லாம் இருந்திருக்காது. இந்திரா காந்தி இருந்து இருந்தால் இப்போது  செந்தில் பாலாஜி  On the spot- னா உள்ள போயிருப்பாரு. செந்தில் பாலாஜியை  இலாகா இல்லாத மாதிரியா வச்சுக்கிறதுக்கும், இந்த கவர்னர் அவமதிக்கிறதுக்கு இந்திரா காந்தி விட்டு இருப்பாங்களா ? வேற வழி இல்ல,  காங்கிரஸ்

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிப்போச்சு… காங்கிரசில் இருந்து இன்றைக்கு வந்து நம்முடைய நாடு விடுதலை பெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னைக்கு அந்த பலவீனமான காங்கிரஸ்ஸை நீ போய் ஆக்கிரமிச்சுட்டு இருக்குற…

நம்முடைய தமிழகத்திலே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட,  ஒரு அரசியல் மாற்றத்திற்கு வித்திட,  தமிழகத்திலே இன்னைக்கு திமுக ஆட்சி  பொறுப்புக்கு வந்த பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலே இந்து இயக்கங்கள் ஒடுக்கப்படுகிறது, பொய் வழக்குகள் புனையப்படுகின்றது, நசுக்கப்படுகிறது என தெரிவித்தார்.