EPFO என்பது நாட்டிலுள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் தங்களுக்கு பலன் அளிக்கும் ஒரு சமூகப்பாதுகாப்புத் திட்டம் என்பதை ஊழியர்கள் கவனிக்கவேண்டும். பொதுவாக வருங்கால வைப்புநிதி என்பது ஒரு ஓய்வூதியம் சார்ந்த சேமிப்பு (அ) முதலீட்டுக் கணக்காக கருதப்படுகிறது. அதோடு இது ஊழியர் மற்றும் பணி அளிப்போரின் பங்களிப்புகளாகும். ஆன்லைனில் EPFO கணக்கை மாற்றுவது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

முதலாவதாக நீங்கள் அதிகாரப்பூர்வமான உறுப்பினர் சேவா போர்ட்டலை https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ பார்வையிட வேண்டும். உங்களது UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள் நுழைய வேண்டும். இதையடுத்து Online Services ஆப்ஷனை கிளிக்செய்து “One Member- One EPF Account (Transfer Request” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த கட்டத்தில் புதிய டேப்பிற்கு (Tab) செல்லுமாறு அறிவுறுத்தப்படும். நீங்கள் பணத்தை மாற்ற விரும்பும் புது EPFO கணக்கின் விபரங்களை அதில் நிரப்ப வேண்டும்.

உங்களின் புது EPFO கணக்கு எண்ணை உங்களின் சம்பள சீட்டில் (அ) புதிய பணியமர்த்துபவர்களின் EPFO அறிக்கையில் காணலாம். அதன்பின் உங்களது ஆன்லைன் பரிமாற்றத்தின் சான்றொப்பம் தற்போதைய பணியளிப்பவர் (அ) முந்தைய பணியளிப்பவர் வாயிலாக செய்யப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விருப்பத்தை நிரப்புவதற்கு முன்னதாக அவர்களுடன் சரிபார்க்கவும். இதற்கிடையில் இரண்டு நிறுவனங்களினுடைய UAN ஒரேமாதிரி இருப்பின், முந்தைய EPFO கணக்கு எண்ணை உள்ளிடவும். அவை ஒரே மாதிரி இல்லையெனில் பழைய பணி இடத்தின் UAN எண்ணை உள்ளிட வேண்டும்.

அடுத்ததாக நீங்கள் “Get Deatils” என்பதனை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் பிஎப் கணக்கிலுள்ள தகவலை பார்த்து, பணம் மாற்றப்படும் கணக்கை தேர்ந்தெடுக்கவும். ஒருமுறை கடவுச்சொல்லை உருவாக்க “Get OTP” என்பதைக் கிளிக் செய்யவும். முழு செயல்முறைக்கு பின், உங்களது பரிமாற்றக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். நீங்கள் பரிமாற்றக் கோரிக்கையை சமர்ப்பித்த 10 தினங்களுக்குள், பணியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்துக்கு PF பரிமாற்ற கோரிக்கையின் சுய சான்றளிக்கப்பட்ட நகலை வழங்கவேண்டும். பொதுவாக EPFO கணக்கு பரிமாற்றம் முடிவடைவதற்கு 30-45 தினங்கள் ஆகும். அதோடு பணியாளர்கள் EPFO போர்ட்டலில் கோரிக்கைகளின் முன்னேற்றத்தை ஆதார் எண்ணை பயன்படுத்தி கண்காணிக்க இயலும்.