கடலூர் மாவட்டத்தில் உள்ள கரும்பூரில் சாந்தாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அறிமுகமானார். அவர் தான் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனை நம்பி சாந்தாமணி முதற்கட்டமாக 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இதேபோல் ரவிச்சந்திரன் என்பவர் தனது மகனுக்கு வேலை கேட்டு 2 1/2 லட்ச ரூபாயும், சத்யராஜ் என்பவர் வேலை வாங்கித் தருமாறு கூறி 2 1/2 ரூபாயும் செந்தில்குமாரிடம் கொடுத்தனர்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட செந்தில்குமார் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கடந்த 2021-ஆம் ஆண்டு செந்தில்குமாரை கைது செய்தனர். நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த செந்தில் குமாரின் மனைவி பியூலாவையும் கைது செய்தனர்.