டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள். ஒருவருக்கு பகலிலும் மற்றொருவருக்கு இரவிலும் வேலை. இதில் திருமண உறவை பேணுவதற்கு உங்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. ஆனால் திருமணத்தில் வருத்தம் இருக்கிறது.

இதை திருமண பந்தத்தை பேணுவதற்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க கூடாதா என கேள்வி எழுப்பினார். ஆனால் தம்பதிகளின் வழக்கறிஞர் இருவரும் விவாகரத்துக்கு சம்மதித்து விட்டனர் எனவும், மனைவிக்கு ஒரே நேரத்தில் 12.50 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக தருவதற்கு கணவர் ஒப்புக்கொண்டு விட்டார் எனவும் தெரிவித்தார். மேலும் இதை தொடர்ந்து நீதிபதிகள் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.