இந்தியாவில் வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற இருக்கின்றது. இந்த ஷாங்காய் கூட்டமைப்பு என்பது இந்தியா, சீனா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளார்.

இதேபோன்று தற்போது சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ ஷாங்ஃபூவும் இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக சீன அமைச்சர் இந்தியாவுக்கு வருகை புரிய இருக்கிறார். மேலும் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.