செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  ஒரே நாடு – ஒரே தேர்தல் வாய்ப்பிருக்கின்றதா ? என்று தெரியவில்லை. இந்தியாவில் எதை செய்தாலும்  கூட அரசியலமைப்பு சட்டத்தின்படி செய்ய வேண்டும். சில  சட்டப்பேரவையின் காலம் முடிஞ்சிருக்கு. நீங்க ஒரே தேர்தலாக கொண்டு வரணும்னு நினைச்சீங்கன்னா…  அதற்கான சில முறைகள் இருக்கு. பாராளுமன்றத்திற்கு வரணும். அங்கு அதற்க்கு ஒப்புதல் கிடைக்கணும். 3இல் 2 பங்கு பெரும்பான்மை வேணும். 3இல் 2 பங்கு சட்டப்பேரவை ஒப்புதல் தரணும்.

இன்னைக்கு நம்முடைய அரசில் என்ன செய்திருக்கின்றோம் என்றால் ? ஒரே நாடு,  ஒரே தேர்தல் நடத்த முடியுமா ? நடத்த முடிஞ்சால் எப்படி நடத்தணும் ? அதற்கான வாய்ப்பு என்ன ? என ஆய்வு செய்வதற்காக ஒரு கமிட்டி போட்டு இருக்காங்க. நாம் பொறுத்திருந்து அந்த கமிட்டி என்ன ரிப்போர்ட் கொடுக்குதுன்னு பார்க்கணும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த முடியும் அப்படின்னா  எப்படி ?  என்ன நடவடிக்கையில்  நடத்த முடியும் ? என அவுங்க  சொல்றாங்க… அதில் எந்த இடத்திலும் கூட அரசியலமைப்பு  சட்டத்தை மீறக் கூடாது. அரசியலமைப்பு சட்டம் வந்தபோது …  1950 ஜனவரி 26இல் இருந்து..  நான்குமுறை ஒரே நாடு,  ஒரே தேர்தல் தான். 1952, 1957, 1962, 1967. நாலு சைக்கிள் ஒரே நாடு ஒரே தேர்தலாக தான் போச்சு. 1967-க்கு பிறகு… காங்கிரஸ்  சட்டப்பிரிவு 356ஐ அதிகமுறை பயன்படுத்திய பிறகு….  அந்த சைக்கிள் மாறிப் போயிடுச்சு. அதனால கமிட்டி முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அதுவும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள் தலைமையில் இதற்க்கு கமிட்டி போட்டிருக்காங்க. அரசியல் சட்டத்தை பின்பற்ற வேண்டும்..பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இது கொள்கை முடிவு.  பாரதிய ஜனதா கட்சியின்  கொள்கை முடிவு என்பதால் இதை நாளைக்கு காலைல கொண்டு வர முடியாது.

அரசியல் அமைப்பு சட்டத்தில்…. அரசாங்கத்தில் நாம் இருக்கும் போது, இதனை பின்பற்றி தான்  நாம் கொண்டுவரனும். தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை பேசுறோம். இருந்தும் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி தான் கொண்டு வரணும்.அந்த கமிட்டி ஒரே நாடு,  ஒரே தேர்தலுக்கான சாத்திய கூறுகள்..  நடத்த முடிந்தால் ? எப்படி நடத்தலாம்?  என்ன டைம்ல நடத்தலாம் ?  என ஆய்வு செய்யத்தான் கமிட்டி போட்டு இருக்கிறோம். அதனால பொறுத்திருந்து பார்ப்போம்.

கமிட்டியில் முக்கியமான தலைவர்கள் இருக்கிறார்கள்.  பாராளுமன்றத்தினுடைய முன்னாள் செக்யூரிட்டி ஜெனரல் இருக்காங்க. பெரிய பெரிய மனிதர்கள் இருக்காங்க. அரசியல் அமைப்பு சட்டதினுடைய அறிஞ்சர்கள் இருக்காங்க. நம்முடைய உள்துறை அமைச்சர் இருக்காங்க. பொறுத்திருந்து பார்ப்போம்.  எப்படி அவங்க அந்த பிரேம் பண்ணி…  formulate பண்ணி கொண்டு வராங்க என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்தார்.