
டெல்லி சாலைகளில் முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ரத்தக்கறை படிந்த ஆடையுடன் ஒரு பெண் உலா வந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் அந்த பெண்ணை பார்த்து பயந்து ஓடுகின்றனர். அந்தப் பெண் அங்கிருக்கும் கடைவீதிகளில் நடந்து செல்கிறார். அவரது வித்தியாசமான தோற்றத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் பெண் ஹாலோவின் பண்டிகையை கொண்டாடும் விதமாக வித்தியாசமாக ரத்தக்கறை படிந்த உடை மற்றும் முகத்துடன் வீதிகளில் உலா வந்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின் போது பொதுமக்களும் குழந்தைகளும் பேய் வேடம் அணிந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுவார்கள்.
View this post on Instagram