அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ். இங்கிருந்து சுமார் 6 மைல் தெற்கே புறநகர் பகுதியில் சரண்டி என்ற நதி ஓடுகிறது. அர்ஜென்டினா மற்றும் உருகுவே இடையே ஓடும் முக்கிய நதி ரியோ டி லா பிளாட்டோ. இதன் துணை நதி தான் அர்ஜென்டினா தலைநகர் புறநகர் பகுதியில் ஓடுகிறது. இந்த ஆறு திடீரென இரத்த கலரில் மாறியதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதாவது இந்த நதியின் அருகே ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் அந்த ஆறில் தான் கலக்கிறது. அந்த வகையில் இந்த தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலந்ததால் தான் இரத்த நிறமாக மாறியுள்ளது. மேலும் இதற்கு முன்பு சாம்பல் மற்றும் ஊதா நிறங்களில் அந்த நதி மாறியுள்ளது. இது  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.