காட்டுராஜாவாக கருதப்படும் சிங்கத்தின் அகந்தையை ஒரு தனி மாடே முறியடித்து விட்ட வீடியோதான் இப்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

சிங்கம் என்றால் செருக்கும், சத்தும், வலிமையும் என்று நாம் நினைப்பது வழக்கம். ஆனால், இந்த வீடியோ அதற்கு நேர்மாறான உண்மையை வெளியிட்டுவிட்டது. ஒரு வனப்பிரதேசத்தில், ஒரு சிங்கம் தனியாக இருந்த மாட்டை வேட்டையாட முயற்சி செய்கிறது.

ஆரம்பத்தில் அது மாட்டின் கால்களை பிடித்து கீழே வீழ்த்த முயற்சிக்கிறது. ஆனால் எதிர்பாராத அளவில் அந்த மாடு பின்னடிக்காமல் நேரடியாக சிங்கத்தின் மீது பாய்ந்து தாக்குகிறது. திடீரென எதிர்பாராத தாக்குதலால் அவமானத்தோடு சிங்கம் அங்கிருந்து ஓடி விடுகிறது.

இந்த த்ரில்லிங் வீடியோவை @TheeDarkCircle என்ற X இல் பகிர்ந்துள்ளனர். வெறும் 20 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை தற்போது வரை 1.6 லட்சம் பேர் பார்த்துள்ளனர். நூற்றுக்கணக்கான லைக்குகளும், கலக்கலான கமெண்ட்களும் குவிந்துள்ளன.

ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார், “இன்று வனராசா தோற்றார்… மாடு தான் ஹீரோ.” மற்றொரு நபர் எழுதியுள்ளார், “தெரிந்தது – தைரியம் என்பதில் மட்டும் தான் வெற்றி நிலைக்கிறது, பலத்தில் மட்டும் இல்லை.”

சிலர் இதை ‘பிரருதியின் சமநிலை’ எனப் பாராட்டுகிறார்கள் – எல்லா வேட்டையாடுபவர்களும் எப்போதும் வெல்ல முடியாது, சில நேரங்களில் வேட்டைக்கே வேட்டையாடுவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.