
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் பகுதியில், பால் விநியோகஸ்தர் ஒருவரின் செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பப்பு எனப்படும் ஷெரீப் என்ற இளைஞர், பால் பாத்திரத்தில் எச்சில் துப்புவது வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
இந்த சம்பவம் லவ் சுக்லா என்பவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரது வீட்டிற்கும் அருகிலுள்ள வீடுகளுக்கும் பால் விநியோகித்து வந்த ஷெரீப், அந்தப் பானையில் எச்சில் துப்பியதைப் பார்த்ததும் லவ் சுக்லா அதிர்ச்சியடைந்தார்.
Lucknow में थूकने के बाद लोगों को देता था दूध, घर के CCTV में कैद हुई करतूत#ATDigital #Lucknow #MilkMan pic.twitter.com/tWPgCn5m4W
— AajTak (@aajtak) July 5, 2025
வீடியோ ஆதாரத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் கோமதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்து அமைப்புகளும் இதில் தலையிட்டு, சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினர்.
இச்சம்பவம் குழந்தைகள் உட்பட பலர் மாசுபட்ட பாலை குடித்திருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரஜேஷ் சந்திர திவாரி, புகார் பெற்றதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான பின்னர், அகில இந்திய இந்து மகாசபை உள்ளிட்ட அமைப்புகள், ஷெரீப் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் தனது உண்மையான பெயரை மறைத்து, “பப்பு” என்ற பெயரில் பல ஆண்டுகளாக பால் விநியோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி சமூகத்தில் பரவலாக கோபம் எழுந்துள்ளது.
இந்தக் காணொளியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த இந்து அமைப்புகள், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற செயல்கள் பொதுமக்களின் நலனுக்கும் நம்பிக்கைக்கும் எதிரானது என்பதால், சம்பந்தப்பட்டவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.