தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பிரிவு சாலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது தர்மபுரி நோக்கி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், வாகன வரி செலுத்தாமலும் லாரிகளை ஓட்டியது தெரியவந்தது.
இதனால் இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாலக்கோடு வட்டார போக்குவரத்து கழகத்திற்கு இயக்கி சென்றனர் பின்னர் 2 லாரிகளுக்கும் தலா 15,000 ரூபாய் அபரதம் வசூலிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.