2023 உலக கோப்பையின் முதல் போட்டியில் இன்று இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

இந்தியா நடத்தும் 2023 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் இன்று (அக்டோபர் 5)  தொடங்குகிறது. தொடக்க ஆட்டம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து உள்ளது. 2019ஆம் ஆண்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீழ்த்தியது. அந்தப்போட்டியை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவரும் டிராவில் முடிய பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையும் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து அணி நல்ல பார்மில் உள்ளது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று வலுவாக உள்ளது. கடந்த உலக கோப்பை தோல்விக்கு நியூசிலாந்து இன்று பழிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதல் ஆட்டத்தில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுத்தி இல்லாமல் நியூசிலாந்து விளையாடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸும் இடுப்பு பிரச்சனையால் ஆடமாட்டார் என கூறப்படுகிறது.  

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி இன்று  பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும். அதாவது டாஸ் நேரம் மதியம் 1.30 மணிக்கு நடக்கும்.  அதே நேரத்தில் நிறைய பயிற்சி போட்டிகள் மழையால் நிறுத்தப்பட்டதால் இன்று மழை வருமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே இன்று ரசிகர்கள் கவலையடைய தேவையில்லை.

வானிலை நிலவரம் :

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தாலும், அகமதாபாத்தில் குறைந்தபட்சம் வியாழக்கிழமை (அக்டோபர் 5) மழை அச்சுறுத்தல் இல்லை, பகலில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மிகவும் வெப்பமான நாளாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவில் வெப்பநிலை 28° C ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை அச்சுறுத்தல் இல்லை என்றாலும், கேப்டன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு கவலையாக இருக்கும் ஒரு விஷயம் பனி காரணியாக இருக்கும், இது இரண்டாவது இன்னிங்ஸின் போது மாலை தாமதமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து vs நியூசிலாந்து போட்டியை இந்தியாவில் டிவியில் எங்கு பார்க்கலாம்?

இந்தியாவைச் சேர்ந்த ரசிகர்கள் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து உலகக் கோப்பை போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம்.

இங்கிலாந்து vs நியூசிலாந்து போட்டியை இந்தியாவில் ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்?

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து உலகக் கோப்பை போட்டியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையதளம் மற்றும் செயலியில் ஆன்லைனில் பார்க்கலாம்.

இங்கிலாந்து அணி :

ஜோஸ் பட்லர் (கே), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.

நியூசிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கே), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, வில் யங். நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் முதல் போட்டியில் ஆடாததால் டாம் லாதம் அணியை வழி நடத்துவார்..