இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக இந்த 2 பேர் இருப்பார்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்..

2013ல், மகேந்திர சிங் தோனி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, இந்தியா ஐசிசி கோப்பையை ஒருமுறை கூட வெல்லவில்லை. அடுத்த ஆண்டு, 2014ல், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை தவறவிட்டது. அதன்பிறகு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.2019 ஒருநாள் உலகக் கோப்பையில், அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்திடம் தோற்றது. அடுத்து 2021, 2022ல் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை பைனலுக்கு வந்து தோல்வியை தழுவியது.

கோப்பையை வெல்ல சிறந்த வாய்ப்பு :

ஒருநாள் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை, 2011 முதல், போட்டி நடத்தும் நாடு தொடரை கைப்பற்றி வருகிறது. 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா கோப்பையையும், 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவும், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தும் உள்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் வென்றுள்ளது.

தற்போது, ​​2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்துவதால், இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில் இந்த 2023 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ் கெய்ல் பேட்டி :

இந்நிலையில், நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல், இந்திய அணிக்கு கோப்பையை வெல்வது யார் என பேசியுள்ளார்.அதில், “மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக இருப்பார்கள். பும்ரா தனது பங்களிப்பால் கேம் சேஞ்சராக இருப்பார். சூர்யகுமார் யாதவ் ஒரு கேம் சேஞ்சர் என கூறினார்.

சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். குறிப்பாக, கடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் சில ரன்களே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.