ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதன்பின் மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி இன்று ராம நவமி நாள். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராமருக்கு சூரியனின் கதிர்கள் ஒன்றாக சேர்ந்து சூரிய திலகம் வைத்துள்ளனர்.

சமயநெறி சார்ந்த இராமேஸ்வரம் நிலத்திலிருந்து நாட்டு மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மொழியை உலகம் எங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கும். தமிழகத்தில் உள்ள தலைவர்களின் கையெழுத்து கூட ஆங்கிலத்தில் உள்ளது.

கையெழுத்தேனும் தமிழில் இருக்கலாம் அல்லவா என்று கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் நூற்றாண்டுக்கு முன்பு பாம்பன் பால கட்டுமான பணியில் ஈடுபட்டவர் ஒருவர் குஜராத்தி. புதிய பாம்பன் பாலத்தினை ஒரு குஜராத்தி ஆகிய நான்தான் திறந்து வைக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.