பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்த பிறகு திமுக  கூட்டணியிலில் உள்ள கட்சிகள் செல்லும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ,

ஊடக நண்பர்கள் நீங்கள் இந்த மாதிரி ஒரு விவாதத்தை உருவாக்கி இருக்கீங்க. அந்த கூட்டணியில் ஒரு விரிசல் வருவதற்கும், எங்கள் கூட்டணியில் அதனால் பாதிப்பு வருவதற்கு சம்பந்தமே கிடையாது. நாங்க கூட்டணி தலைமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த கூட்டணி உடைய இலக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் முக்கியம்.  மதவாத பாஜக ஆட்சி மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது.

அந்த இலக்கை அடையணும்னா…  நாங்க இந்த கூட்டணியில் ஒற்றுமையா இருக்கணும். அதுதான் எங்களுடைய நோக்கம். பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்துள்ளதால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் ஓட்டு அதிகம் செல்ல வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. அதை நீங்க எப்படி பாக்குறீங்க என்ற கேள்விக்கு, அந்த ஆசைதான் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிறைய இருக்கு.  சமீப  ஒரு வாரம் அது சம்பந்தமாக அவர் நிறையா பேசிட்டு இருக்காரு. செஞ்சுட்டு இருக்காரு.

சிறுபான்மை மக்களை பொறுத்தவரை எந்த கூட்டணி நல்லது என்பது அவர்களுக்கு தெரியும். இந்த ஒரு மாச நிகழ்வை  வைத்து எதுவும் சொல்ல முடியாது. கடந்த ஐந்து வருடங்களாக என்ன எல்லாம் நடந்திருக்கு நாட்டுல?  யார் யாருக்கெல்லாம் ஆதரவு கொடுத்து இருக்காங்க.  இதெல்லாம் அவுங்களுக்கு தெரியும்.

அதனால் நல்ல ஒரு முடிவெடுப்பாங்க.   அதிமுக உடைய நிலைப்பாடு  அந்த  இயக்கத்தினுடைய உரிமை…  அவங்க என்ன வேணாலும் எடுப்பாங்க ? அதுக்கு நான் ஒன்னும் சொல்ல முடியாது. அதிமுக – பாஜக பிரிவு நிரந்தரமான பிரிவுன்னு பாக்குறீங்களா ? இல்லை அரசியலுக்காக நாடகம் என சொல்லுறீங்களா ? என்ற கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ,  அரசியல் இயக்கங்கள், அரசியல்வாதிகள் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாது. எப்போ எப்படின்னு சொல்ல முடியாது. அவங்க என்ன முடிவு எடுப்பாங்கன்னு எனக்கு எப்படி தெரியும் என தெரிவித்தார்.