மலையாள திரை உலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷ்மயா மோகன்லால் மற்றும் பிரணவ் மோகன்லால் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சுசித்ரா மோகன்லால் மலையாள யூடியூப் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது, அப்பு(பிரணவ்) இப்போது ஸ்பெயினில் உள்ள ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். தங்கும் இடம் மற்றும் உணவுக்காக அவர் சம்பளம் ஏதும் வாங்காமல் வேலை செய்து வருகிறார்.
அங்கிருந்து அவர் வீட்டிற்கு வரும்போது, அந்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார். எனக்கு சினிமா பட ஸ்கிரிப்டுகளை கேட்பது பிடிக்கும், அதனால் நான் கேட்பேன். அவர் தற்போது 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்து வருகிறார். ஆனால் வருடத்திற்கு இரண்டு படமாவது நடிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அவர் சினிமா வாழ்க்கை என அனைத்தையும் பேலன்ஸ் செய்ய நினைக்கிறார். அப்பு தனது அப்பாவுடன் சேர்ந்து நடிப்பதை நான் விரும்பவில்லை. இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது எனக்கு பிடிக்காது என்று கூறினார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் அப்பு பிரபலமானார்.