தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் நடிப்பில் வெளியாக உள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அஜித்குமார், திரிஷா அர்ஜுன்,ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். நிரவ்ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒலிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மகிழ்  திருமேனி படம் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். இதில் அவர் கூறியதாவது, விடாமுயற்சி அற்புதமான படம். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பஞ்ச் டயலாக்குகள் கிடையாது அஜித் சாருக்கு மிகப் பிரம்மாண்டமான என்ரிக் காட்சியும் இருக்காது, ஹீரோயிசம் மற்றும் மாஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் கிடையாது. இருந்தும் விடாமுயற்சி ரசிகர்கள் உட்பட அனைவரையும் ஈர்க்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்றார்.