லக்னோ அதிர்ச்சி கோம்டிநகர் பிஸி ரோட்டில் பெண் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வீடியோ வைரல். இரு ஆண்கள் ஒரு பெண்ணை சாலையின் நடுவே தாக்கி, ஒருவன் அவர் துப்பட்டாவை இழுத்து கையைப் பிடித்தார்;

மற்றொருவர்  பலவந்தமாக இழுத்துச் செல்ல முயன்றார். இதைப் பார்த்து உதவிக்கு வராமல், சுற்றியிருந்தவர்கள் மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பலர் கேள்வி எழுப்பினர்; “பிஸியான சாலையில் இப்படியா?” என ஆத்திரம் கொப்பளித்தது.

ஆனால், யூ.பி. காவல்துறை இதை “குடும்பப் பிரச்சினை” என வகைப்படுத்தி திருப்பம் தந்தது. வீடியோவில் தெரியும் ஆண் பெண்ணின் உறவினர் (மருமகன்) என்றும், வீட்டுச் சண்டைக்குப் பின் வீட்டை விட்டு வெளியேறிய அவரை”வீட்டுக்கு திரும்ப வர கேட்டுக்கொண்டார்” என்றும் போலீஸ் தெரிவித்தது.

பேச்சுவார்த்தைக்குப் பின் பெண் குடும்பத்துடன் திரும்பிச் சென்றதாகவும், சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் “பொய்யானவை, அடிப்படையற்றவை” எனவும் காவல்துறை அறிவித்து வழக்கை மூடியது.