நம்மில் பலருக்கும் பல வினோதமான விஷயங்களில் பயம் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில் ஒரு சிலருக்கு உயரமான இடங்கள், இருட்டு, பாம்பு, பல்லி, விலங்குகள் என்றாலே பயம். அது போல ருவாண்டாவில் கலிக்சிடே நசம்விதா என்ற 71 வயது ஆண் ஒருவர் பெண்கள் என்றாலே அதிகமான பயம் கொண்டுள்ளார். பெண்களிடம் பேசுவதை தவிர்த்து வரும் இவர் ஏதேனும் பொருட்கள் தேவைப்பட்டால் அதைக் கூட பெண்களின் அருகில் சென்று பெறாமல் வீட்டின் வாசலில் தூக்கி எறியுமாறு கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, அவர் 55 ஆண்டுகளாக தன்னை தானே தனிமைப்படுத்தி வாழ்ந்துள்ளார். மேலும் அவர் வீட்டைச் சுற்றி 15 அடி வேலி கட்டியுள்ளார். இத்தகைய பயம் கைனோஃபோபியா என்று அழைக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய பயம் இவர்களுக்கு இதயத் துடிப்பை அதிகரித்து சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.