
ஆன்லைன் விளையாட்டுக்களால் பணம் இழப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து செயல்படுத்தி வருகின்றது. இதில் ஆன்லைன் விளையாட்டுக்கள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு மேல் விளையாட அனுமதிக்க கூடாது என்றும் ஒவ்வொரு மாதமும் 5000 முதல் 20 ஆயிரம் வரை மட்டுமே பணம் செலுத்தி விளையாடும் வகையில் பல திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இது குறித்த ஆய்வில் குழந்தைகள் தங்களது பெற்றோர்களின் செல்போன்களை ஆன்லைன் விளையாட்டுக்காக பயன்படுத்துவது தெரிய வந்தது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் விளையாட வேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டு வந்தால் குழந்தைகள் ஆன்லைனில் நேரம் செலவழிப்பது குறையும். இந்த விதிகள் அமலுக்கு வந்தாலும் பணம் கட்டாமல் பொழுது போக்கிற்காக விளையாடும் விளையாட்டுகளுக்கு இது பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.