
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றுள்ளார்.
அங்கு நடைபாதையில் நடந்து சென்ற அவர் 2350 வது படியில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் சோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதை அறிந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.