இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அதேபோல் தரமான சேவையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது பேசிக் கொண்டிருக்கும்போதே நெட்வொர்க் கட்டாவது மற்றும் கால் தானாக மியூட் ஆகிவிடுகிறது போன்றவை தான் தற்போது மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெரும்பான்மையான பிரச்சனையாக உள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் இது போன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் டிராய் உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஏர்டெல், வோடபோன், ஜியோ, ஐடியா போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால் தெரியாத நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை தடை செய்ய வேண்டும் எனவும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இப்படி வரும் மெசேஜ்களை அறுவது நாட்களுக்குள் தடை செய்ய வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை கிடைக்கும் என டிராய் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் நெட்வொர்க் நிறுவனங்களின் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கான சேவை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்றவற்றை மிகவும் கூர்மையுடன் கவனித்து வருவதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களும் அதிகரித்துள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கான நெட்வொர்க் சேவையில் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்து வருகிறது. அவற்றிற்கு தீர்வு காணும் நடவடிக்கையில் தற்போது சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்கு  முறை ஆணையம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலமாக இனி வாடிக்கையாளர்களுக்கு தரமான நெட்வொர்க் தேவை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.