வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கலைவாணி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து மாஸ்க், நாப்கின் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடையை விரிவாக்கம் செய்வதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் அஸ்திவாரம் போடுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளனர்.

அப்போது சிலையை சுற்றி இருக்கும் வளையம் உடைந்த நிலையில் 3 அடி உயரமுடைய நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதுகுறித்து அறிந்த ஒடுகத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.