தமிழ் சினிமாவின் முன்ணணி நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. இப்போது அவரது நடிப்பில் அடுத்தடுத்து அகிலன், பொன்னியின் செல்வன்-2 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவி தன் தற்போதைய பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது “மாநகரம் திரைப்படத்தை ரிலீஸ் செய்த கையோடு டைரக்டர் லோகேஷ் அடுத்த படத்துக்காக தன்னை அணுகியதாகவும், ஆனால் அப்போது தன்னால் அந்த பிராஜெக்டில் நடிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்து உள்ளார். எனினும் இப்போது சிறந்த கதாபாத்திரம் அமைந்தால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். அது அடுத்தடுத்த திரைப்படங்களில் வரும்படியான கேமியோ ரோலாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.