செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செல்லூர் ராஜீ  அண்ணா சொல்லி இருக்காங்க. மத்தியில பிரதமராக மோடி அவர்களும்,  மாநிலத்தில் எடப்பாடி அவர்களையும் பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கணும்னு. இதை  நான் எப்படி அறிவிப்பேன் ? இதை தேசிய தலைமை, அங்கு இருக்கக்கூடிய நம்முடைய தேசிய தலைவர் சொல்லணும்.என்னை பொறுத்தவரை சில விஷயத்துல நான் தெளிவா இருக்கேன்.

அரசியல் இப்படி தான் பண்ணனும்னு நான் தெளிவா இருக்கேன். அந்த மாதிரி அரசியல் தான் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கேன்.  நான் யாரையும்,  எங்கேயும் தவறா பேசல. அன்னைக்கு கூட சொல்லி இருந்தேன். என்னை பத்தி வருகின்ற சில கமெண்ட்டுக்கு  கூட நான் பெருசா பதில் அளிக்க மாட்டேன். ஆனால் என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் போது….  நான் பதில் பேசுவேன்.

நாளைக்கு காலைலயும்… நாளை மறுநாள் காலையும் பதில் பேசுவேன்.   அடுத்த வாரமும் பேசுவேன். தன்மானத்தை விட்டுக் கொடுத்து அரசியல் செய்வதற்காக நான் இங்கே வரவில்லை. அதில் தெளிவா இருக்கேன். தன்மானம் முக்கியம்,  அதன் பின்பு தான் அரசியல்.  இதில் நான் ரொம்ப தெளிவா இருக்கேன். அப்படித்தான் என்னுடைய வாழ்க்கையும்  இருந்தது.

மத்தபடி யார் என்னை என்ன குற்றம் சொன்னாலும் கூட பெருசா பதிலே சொல்ல மாட்டேன். நீங்க கேப்பிங்க ? சிரிச்சிட்டு போயிருவேன்… வேற ஏதாவது சொல்லுவேன் அல்லது வேற ஏதாவது பிஜேபியின் தலைவர்கள் பதில் சொல்வாங்க. என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் போது…  பதில் சொல்வது என்னுடைய கடமை மட்டுமல்ல,  என்னுடைய உரிமையாக பார்க்கிறேன்  தெரிவித்தார்.