இன்றைய காலகட்டத்தில் தகுதியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது பல குடும்பங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், உயர் கல்வி கற்ற பெண் மருத்துவர் ஒருவருக்கு மாப்பிள்ளை தேடுவதில் அவரது தாய் சந்திக்கும் சிக்கல்கள் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி முடித்துவிட்டுப் பெரிய மருத்துவமனையில் பணியாற்றும் தனது மகள், ஒரு மருத்துவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஆனால் மருத்துவத் துறையில் உள்ள 32 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான வரன்கள் தோற்றத்தில் முதிர்ச்சியுடனும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறையின்றியும் இருப்பதாக அந்தத் தாய் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலப் படிப்பு மற்றும் பணி அழுத்தம் காரணமாகப் பல மருத்துவர்கள் இளமையிலேயே தலைமுடி உதிர்தல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளைச் சந்திப்பதாகவும், தன் மகள் தனது உடல் தகுதியைப் பேணுவதில் காட்டும் ஆர்வத்தை மாப்பிள்ளை வீட்டாரிடம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அழகு மற்றும் தகுதிக்கு ஏற்றவாறு வரன் அமையாததால் மற்ற துறைகளிலும் தேடி வருவதாகவும், இறுதியில் சில சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக அவர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ள இக்கருத்து, இன்றைய திருமணச் சந்தையில் நிலவும் எதார்த்தமான சிக்கல்களைப் பிரதிபலிக்கிறது.
