ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,575 வாக்குகள் வித்தியாசம் பெற்றார். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து பெற்றுள்ளார்.