
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள டோரிலினா ஃபீல்ட்ஸ் (32) என்ற இளம்பெண், தனது தாயான ட்ரூடி ஃபீல்ட்ஸ் என்பவரை கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக கூறு போட்டு வீசிய சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோரிலினா, மாந்திரீகம் மற்றும் சூனியம் போன்ற விசயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்தவுடன் தாய் தாது மகளை கண்டித்துள்ளார்.
இதற்கான காரணமாக, டோரிலினா தனது தாயிடம் அடிக்கடி மாந்திரீக விஷயங்களை பற்றி பேசியுள்ளார். தனது மகளின் நடத்தை பற்றி ரூட்டி ஒருவரிடம் கூறியுள்ளார். அவர் போலீசுக்கு தகவல் அளித்தார். இந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொள்வதற்காக வந்தனர்.
முதல் முறையாக போலீசாரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த டோரிலினா, பின்னர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கைது செய்யப்பட்டார். டோரிலினா உடம்பு முழுவதும் ரத்த கறைகள் இருந்தது. தனது தாயை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதை அவர் நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இது சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.