திரிபுரா செபாஹிஜாலா மாவட்டத்தில் 51 வயதான நபர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவர் தனது இரண்டு மகன்கள் உடன் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பெண் தனது தாயுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது அவரது மனைவியும் மாமியாரும் சேர்ந்து ஆண் நண்பர்கள் இரண்டு பேருடன் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டனர்.

அதனை பார்த்த கோழி பண்ணை உரிமையாளர் தன்னிடம் விவாகரத்து கோரி விட்டு வேறு ஆண்களுடன் மனைவி மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க முடியாமல் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மனைவியும் மாமியாரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது கோழிப்பண்ணை உரிமையாளர் கூர்மையான ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.