விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியில் குடும்ப தகராறில் முருகேஸ்வரி, கருப்பாயி ஆகிய இரண்டு பேரையும் உறவினரான காளிராஜன் என்பவர் குத்தி கொலை செய்தார். பின்னர் காளிராஜன் திருத்தங்க காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காளிராஜன், அவரது தங்கை ரதி லட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் உறவினர் ஒருவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று தலைமறைவாக இருந்த ரதிலட்சுமி நேற்று திருத்தங்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் ரதிலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணை முடிந்த பிறகு தான் கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.