சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை வகித்தார். அந்த கூட்டத்தில் துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆணையாளர் ரங்கநாயகி, துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்காக உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில் உறுப்பினர்கள் பேசியதாவது மானாமதுரை நகரில் விபத்துகளை ஏற்படுத்தும் போட்டு கால்நடைகளை சாலையில் சுற்றி திரிய விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இனிவரும் காலங்களில் கழிவுநீர் கால்வாய் புதிதாக அமைக்க பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தலைவர் மாரியப்பன் கென்னடி உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.