வீரமே வாகைசூடும் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஷால் நடித்த படம் “லத்தி”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கி இருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து இருக்கிறார். ராணா புரொடக்ஷன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரித்திருந்தனர். இந்த திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது. இப்போது ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” படத்தில் நடிக்கிறார் விஷால்.

இந்த நிலையில் விஷால் தன் மார்பில் பிரபல நடிகரும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான எம்ஜிஆரின் படத்தை டாட்டூவாக போட்டு உள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டாட்டூ உண்மையானதா? (அ) படத்திற்காக வரையப்பட்டாதா..? என இதுவரையிலும் தெரியவில்லை.