
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனி ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து ICC வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில், 17,266 ரன்கள் 829 ஆட்டமிழப்புகள் தோனியின் நம்பர்களின் சிறப்பை மட்டும் அல்ல அசாதாரமான நிலைத்தன்மை, உடற்தகுதி மற்றும் நீண்ட கெரியரையும் பிரதிபலிக்கிறது என்று ஐசிசி புகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தல தோனி இணைக்கப்பட்டது குறித்து புகழ்ந்து பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ஒட்டுமொத்த உலகம் இதுவரை கண்டதிலேயே தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோணி. ஓடிஐ உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி டெஸ்டுக்கான ‘GOLDEN MAZE’ என அனைத்து ஐசிசி கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் அவர் வைத்துள்ளார். அனைத்தையும் அணியின் தலைவனாக முன் நின்று வென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.