நாம் ஒவ்வொரு பொருட்களை வாங்கும் போதும் அதில் MRP விலை குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி என்றால் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். ஒவ்வொரு பொருட்களையும் எவ்வளவு அதிகபட்ச விலை வைத்து விற்கலாம் என்பதற்கான குறியீடு தான் MRP விலை ஆகும். இது அந்த பொருள் இருக்கும் பாக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அல்லது முன் பக்கம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த MRP விலைக்குள், வரிகள், தயாரிப்பு, போக்குவரத்து செலவு மற்றும் லாபம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கிவிடும்.

அதனால் கடைகளில் அல்லது ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது MRP விலையைப் பார்த்து வாங்குவது நல்லது. MRP விலையை விட கூடுதல் விலைக்கு பொருள் விற்கப்பட்டால் அது குறித்து சட்ட அளவியல் துறையிடம் புகார் அளிக்கலாம். அது குறித்து விசாரித்து அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேசிய நுகர்வோர் ஆணைய எண்களான 1800-11-4000/ 1915 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம். அதனைப் போலவே 8800001915 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி மாவட்ட தேசிய நுகர்வோர் ஆணையம் மற்றும் Umang செயலிகள் மூலமாக புகார் அளித்தும் தீர்வு காணலாம்