
ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயணம் நிறைவடைந்தது. இந்த சீசனில் குழுவாக அவர்களின் ஆட்டம் மோசமாக இருந்தாலும், சில வீரர்கள் தங்களது தனிப்பட்ட சாதனைகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர். குறிப்பாக, 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 38 பந்துகளில் 101 ரன்கள் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இளைய வீரராகப் பதியப்பட்டார்.
போட்டிக்குப் பின் அவருக்கு 500க்கும் மேற்பட்ட மிஸ்டு கால் வந்ததாகவும், அவர் தனது போனை 4 நாட்கள் அணைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். “நான் கடந்த 3-4 வருடங்களாக இதற்காக பயிற்சி எடுத்தேன். கடினமாகத் தெரிந்த விஷயங்கள் இப்போது எளிதாகின்றன. இயற்கையான ஆட்டம் இல்லை, அணிக்குத் தேவையானபடி விளையாடுவதுதான் முக்கியம்,” என வைபவ் கூறினார்.
இப்போது அவர் அடுத்த கட்ட இலக்காக இந்தியா அண்டர்-19 அணிக்காக இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்க உள்ளார். அங்கு ஐந்து, 50 ஓவர் போட்டிகளும், மூன்று, நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளும் உள்ளன. “அடுத்த ஆண்டு நீ சந்திக்க போகும் பவுலர்கள் தயாராக இருப்பார்கள். அதற்காக நாமும் இன்னும் அதிகமாக தயார் ஆகவேண்டும்,” என தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் அறிவுறுத்தியுள்ளார்.