நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “உலகின் 8வது அதிசயம்” என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியின் படம், மேலும் நெல்லை MLA நயினார் நாகேந்திரனின் படமும் இடம்பெற்றுள்ளது.

செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், இந்த போஸ்டர்களின் மூலம் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இவர் போஸ்டரில், பிரதமருக்கு  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பது போல் இருக்கிறது.

இந்த போஸ்டர்கள், பிரதமர் மோடியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. நெல்லையின் பல பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.