கடந்த 1992 ஆம் ஆண்டு மாடலாக பணியாற்றிய போது, ஐஸ்வர்யாராய்-க்கு கிடைத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களின் நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் இவர் திரை உலகிற்கு அறிமுகமானார்.

உலக அழகி என்று தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு மாடலாக பணியாற்றிய போது ஐஸ்வர்யாராயின் சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பத்திரிக்கை பட்டியல் படப்பிடிப்புக்காக கிருபா கிரியேஷன் என்ற நிறுவனத்தின் மாடலாக ஒப்புக் கொண்டுள்ளார். ஐஸ்வர்யா ராய் அந்த நகலின் விவரப்படி மே 23 1992 ஆம் ஆண்டு, இந்த படப்பிடிப்பை அவர் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் ரூ. 1500 சம்பளமாக வாங்கியுள்ளார். இதன் நகல்தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.