திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியை அடுத்த ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அண்ணாதுரையின் மகன் கணபதி கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வளர்த்த பசு கன்று குட்டியை ஈன்றது. இதனையடுத்து தனது கன்றுக்கு பசு பால் கொடுத்து வந்தது. கடந்த 1 வாரத்திற்கு முன்பு கணபதி வளர்த்த ஆடு 2 குட்டிகளை ஈன்றது.

ஒரு வாரம் தனது தாயிடம் பால் அருந்த ஆட்டுக்குட்டிகள் பசுவிடம் சென்று பால்குடிக்க முயன்றது. வழக்கமாக பசு மாற்று விளங்கின குட்டிகள் பால் அருந்த வந்தால் முட்டி தள்ளிவிடும். ஆனால் அந்த பசு இரண்டு ஆட்டிகுட்டிகளுக்கும் பால் கொடுத்து, நாக்கால் ஆட்டுக்குட்டிகளை நீவிவிட்டது. இதனால் எப்போதெல்லாம் பசி எடுக்கிறதோ ஆட்டுக்குட்டிகள் ஓடி சென்று பசுவிடம் பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. இதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.