
தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
அந்த திட்டத்தின் முதற்கட்டமாக 1,842 புதிய மினி பஸ்களை தமிழகம் முழுவதும் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறுகிய தூர பயணங்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தால் குறுகிய சாலைகள் உள்ள இடத்திலும் பேருந்து செல்ல முடியாத மற்றும் குறைவான மக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது