
டைரக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த படம் “கட்டா குஸ்தி”. இந்த படம் சென்ற டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது விஷ்ணு விஷால், சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராட்சசன், முண்டாசுப்பட்டி ஆகிய படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இதை விஷ்ணுவிஷால் தன் சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருக்கிறார். ராம்குமார், விஷ்ணு விஷால் ஆகியோர் கூட்டணியில் சென்ற 2018ம் வருடம் வெளியாகிய ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
We are extremely happy to announce our next film with the blockbuster combo of the supremely talented @TheVishnuVishal & the Maverick director @dir_ramkumar for their HATTRICK union #VV21 💥 🥁 @teamaimpr pic.twitter.com/qsTpB45qbd
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 20, 2023