
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். மலையாள திரை உலகில் சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் யாராவது தவறாக நடந்து கொண்டால் உடனடியாக அவனை அந்த இடத்தில் செருப்பை கழட்டி அடியுங்கள் என்று விஷால் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து ஹேமா கமிட்டி அறிக்கை போன்று தமிழ் சினிமாவிலும் ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்ற விஷால் உறுதி கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை ரோகிணி தலைமையில் தமிழ் சினிமாவில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஷால் காரில் செல்லும்போது ஒரு தொகுப்பாளினி பேட்டி எடுத்தார். அப்போது அந்த வீடியோவில் நடிகர் விஷால் மீ டு புகார் தொடர்பாக பேசினார். உடனடியாக அந்த ஆங்கர் பேச்சுவார்த்தையில் உங்க பெயரும் மீட்டு புகாரில் இருந்தது விஷால் என்று கூறினார். உடனடியாக ஒரு நிமிடம் ஷாக்கான விஷால் ஆமாம் என்று ஒப்புக்கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்
View this post on Instagram