
‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’ போன்ற திரைப்படங்களில் அருமையான கதையம்சங்கள் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தவர் நடிகர் ஸ்ரீ. சமீபத்தில் வெளியான அவரது ‘இறுகபற்று’ திரைப்படமும் விமர்சகர்களிடம் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் மட்டுமே பங்கேற்று வெளியேறியவர் என்றாலும், ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்திருந்தார்.
Actor #Shri is Back & Braver Than Ever! 💪❤️
Fresh from therapy, Shri returns with a powerful novel titled “May Eye Come In?” 📖👏#Shri #ComebackStory #MayEyeComeIn #MentalHealthMatters #ActorShri #InspiringJourney pic.twitter.com/d2T9XXTYOL— Technologia (@Ttechnologiaa) June 19, 2025
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெலிந்த உடல் மற்றும் அதிர்ச்சியளிக்கும் அரைநிர்வாண புகைப்படங்களை பதிவிட்டதன் மூலம் பெரும் கவலையை கிளப்பினார்.
‘லேடிய்பாய்’ குறித்த பதிவுகளும், அவரது மனநல நிலை குறித்து எழுந்த சந்தேகங்களும், ‘பாலின மாற்று சிகிச்சை செய்தாரா?’ என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன. ஸ்ரீ எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் போனது.
அதற்கிடையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முயற்சியில், ஸ்ரீ மீட்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சையிலிருந்து மீண்டு வந்து, உடல்நலம் மீண்டு ‘ரீ என்ட்ரி’ கொடுத்துள்ளார். மேலும், ‘May I Come In?’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். ரசிகர்கள் மீண்டும் அவரை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.